\
தனுஷ் - கார்த்திக் நரேன் இணையும் படத்தின் தலைப்பு 'மாறன்'

தனுஷ் - கார்த்திக் நரேன் இணையும் படத்தின் தலைப்பு 'மாறன்'

தனுஷ் - கார்த்திக் நரேன் இணையும் படத்தின் தலைப்பு 'மாறன்'
Published on: 
தனுஷ் நடித்துள்ள 43-வது படத்திற்கு 'மாறன்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த படத்திற்கு 'மாறன்' என்று தலைப்பு வைத்திருக்கின்றனர்.
இதே தலைப்பில் சத்யராஜ் வடிவேலு நடிப்பில் ஏற்கெனவே ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் அந்த தயாரிப்பாளரிடம் முறையாக அனுமதி பெற்று 'மாறன்' தலைப்பை தனுஷ் திரைப்படத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com