டி.ராஜேந்தரின் விமர்சனத்தால் மேடையிலேயே அழுத தன்ஷிகா

டி.ராஜேந்தரின் விமர்சனத்தால் மேடையிலேயே அழுத தன்ஷிகா

டி.ராஜேந்தரின் விமர்சனத்தால் மேடையிலேயே அழுத தன்ஷிகா
Published on

விழித்திரு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் டி.ராஜேந்தர், ‌நடிகை தன்ஷிகாவை விமர்சித்து அடுக்கு மொழியில் பேசியதால், விழா மேடையிலேயே, தன்ஷிகா அழுதுள்ளார். 

அவள் பெயர் தமிழரசி படத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கியுள்ள படம் விழித்திரு. கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், விழித்திரு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் தன்ஷிகா நன்றி தெரிவித்த போது, டி.ராஜேந்தரின் பெயர் மட்டும் விடுபட்டு விட்டது. 

அத‌ன் பின்னர் பேச வந்த டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவும், என் பெயரை மறந்துவிட்டார் என்று கூறினார். மேலும், “விழித்திரு படத்தில் நடத்ததற்கு பிறகுதான் தன்ஷிகா கபாலி படத்தில் நடித்தார். மேடையில் பேசும் போது என்னுடைய பெயரை சொல்லவில்லை. தன்ஷிகாவெல்லாம் என்னுடைய பெயரை சொல்லியா நான் வாழப்போகிறேன். ஹன்சிகாவை பற்றியே கவலைப் படாதவன் தன்ஷிகாவை பற்றியா கவலைப்பட போகிறேன். மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது" என்றார்.

அதற்கு தன்ஷிகா மன்னிப்பு கேட்டுக்கொண்ட நிலையில் அதை, தனக்கே உரிய அடுக்கு மொழி பாணியில், "நீ கட்டி வரவில்லை சாரி(saree), இப்ப கேட்கிற சாரி(sorry) டி.ராஜேந்தர் விமர்சனம் செய்துள்ளார். இதனால் சங்கடத்திற்கு உள்ளான தன்ஷிகா மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com