கமலின் ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட்!

கமலின் ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட்!

கமலின் ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட்!
Published on

கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த  ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது

கமல்ஹாசனுக்கு கடைசியாக வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2. அதற்கு பின்பு அரசியல் பிரவேசம் எடுத்த கமல்ஹாசன் சின்னத்திரை நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த  ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசனுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அதனை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ''உங்கள் பங்கேற்புடன் எனது குழுவை வலுப்படுத்துவதற்கு நன்றி.  சில திட்டங்களை உருவாக்கும்போது நன்றாகவும் சரியாகவும் உணர முடியும். தலைவன் இருக்கிறான் அத்தகையானது.  திட்டத்திற்கான உங்கள் உற்சாகத்தின் நிலை அளப்பரியது. அதை என் மற்ற குழுவினருக்கும் பரப்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

தமிழ், இந்தியில் உருவாக இருக்கும் இந்தப்படத்திற்கு இந்தியில் அமர் ஹைன் எனப்பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனுடன் முக்கியப்பாத்திரத்தில் பாலிவுட் நட்சத்திரம் சைஃப் அலிகான் நடிக்க இருப்பதாகவும் அமீர் கானுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. அரசியல், நிதி மற்றும் நிழல் உலகம் பற்றிய த்ரில்லர் படமாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com