தனி ஒருவன் 2 பிப்ரவரியில் தொடக்கம்?

தனி ஒருவன் 2 பிப்ரவரியில் தொடக்கம்?

தனி ஒருவன் 2 பிப்ரவரியில் தொடக்கம்?
Published on

ஜெயம் ரவியின் தனி ஒருவன் 2 படம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்றப் படம் தனி ஒருவன். இப்படத்தில், நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியாக ஜெயம் ரவி மிரட்டியிருப்பார்.

ஊடகங்களில் வெளியாகும் சிறு செய்தியையும் எப்படி பார்க்கவேண்டும்? ஒவ்வொன்றுக்கும் உள்ள அரசியல் தொடர்பு? போன்றவற்றை விரிவாகக் காட்டி மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதால், அந்த ஆண்டின் சிறந்தப் படமாக அமைந்தது. அரவிந்த் சாமிக்கு சிறந்த கம்பேக் படமாகவும் அமைந்தது.  

தற்போது ஜெயம் ரவி இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான அவரின் காட்சிகள் பிப்ரவரியில்தான் முடியவுள்ளது. அதனையடுத்து, தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தனி ஒருவன் 2-வில் அரவிந்த் சாமிக்கு இணையான வில்லனை தேடிக்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மோகன் ராஜா நடிகர் பிரஷாந்த்தை வைத்து இயக்கும் இந்தி ரீமேக் அந்தாதூன் படமும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடியவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com