கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!
கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ திரைப்படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ‘பாபநாசம்’. இந்தப் படத்தை ஜித்து ஜோசப் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தம்பி’. இதில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியிருக்கிறது. 

படத்தின் டீசர் நாளை வெளியாகும் என நடிகர் கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த படம் நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும், தற்போது எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com