இன்று மாலை வெளியாகிறது ‘தளபதி 63’ அப்டேட்!

இன்று மாலை வெளியாகிறது ‘தளபதி 63’ அப்டேட்!
இன்று மாலை வெளியாகிறது ‘தளபதி 63’ அப்டேட்!

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்திற்கான பூஜை எளிமையாக நடைபெற்றது. படத்தின் மேற்கொண்ட தகவல்கள் இன்று மாலை வெளியாகவுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சர்காரின் வெற்றிவிழாவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. சர்காரை தொடர்ந்து விஜயின் அடுத்தப்படத்தை அட்லி இயக்குவார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

விஜய்யை வைத்து அட்லி கூட்டணியில் உருவான ‘தெறி’,‘மெர்சல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வணிக ரீதியில் வெற்றிப் பெற்றன. மேலும்  ‘மெர்சல்’ வெற்றிப் படமாக அமைந்தாலும் திட்டமிட்ட நாளில் அது வெளியாகாததால் தயாரிப்பு அளவில் சிக்கலுக்குள்ளானது. எனவே அதனை சரி செய்யும் நோக்கில் விஜய், மீண்டும் இயக்குநர் அட்லிக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டது. 

அதன்படி, விஜய்யுடன் 3வது முறையாக இணையும் அட்லி ‘தளபதி 63’இயக்க இருக்கிறார். இந்த செய்தி இன்று அதிகாரப்பூர்வமாகியுள்ளது. ‘தளபதி 63’ படத்திற்கான பூஜை எளிமையாக இன்று நடத்தப்பட்டது. இந்த திரைப்பட்டத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் அட்லி என்பது உறுதியாகிவிட்ட நிலையில் படத்தில் மேற்கொண்ட தகவல்கள் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்லி - விஜய் கூட்டணி என்பதால் படத்தில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு கோடிட்டது போல இருந்தது. இந்நிலையில் அட்லியின் திரைப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்குமா? அல்லது கமெர்ஷியல் படமாக இருக்குமா? என்று அனைவரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com