“ஏ... எப்புர்றா” இன்ஸ்டா பக்கம் தொடங்கிய விஜய்... வெறும் 99 நிமிடங்களில் மில்லியன் ஃபாலோயர்ஸ்!

நடிகர் விஜய், இன்ஸ்டாகிராமில் இன்று இணைந்துள்ளார்.
Actor vijay
Actor vijayInstagram

நடிகர் விஜய், இன்று இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். தொடங்கி கிட்டத்தட்ட 2-3 மணி நேரத்திலேயே 1.8 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார் விஜய்!

நடிகர் விஜய், தற்போது நடிகர்கள் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜூன், ப்ரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் இணைந்து நடிக்கும் லியோ படத்தின் வேலைகள் வேகவேகமாக நடந்துவருகிறது. காஷ்மீரில் 50 நாட்களுக்கும் மேலாக சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது.

காஷ்மீரில் 50 நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில், சமீபத்தில் சென்னைக்கு திரும்பியது படக்குழு. தங்களின் காஷ்மீர் பயணம் முடிந்ததை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாகவும் வெளியிட்டிருந்தது.

Actor vijay
‘எக்ஸ்க்ளூசிவ் வீடியோ வேணும்னு கேட்டிங்களாமே’ - ‘லியோ’ டீம் பகிர்ந்த விஜய், சஞ்சய் வீடியோ

அதிலிருந்து விஜய்யின் புகைப்படங்கள் பல ட்ரெண்டான நிலையில் தற்போது ‘லியோ’விலிருந்தே புகைப்படமொன்றை போட்டு தன் இன்ஸ்டா பக்கத்தை தொடங்கியுள்ளார் விஜய். தன்னுடைய முதல் பதிவில், தன்னுடைய ஃபேமஸ் டயலாக்கான ‘ஹலோ நண்பாஸ் நண்பீஸ்...’ என்று போட்டிருக்கிறார் விஜய்!

இந்த இன்ஸ்டா பக்கம் தற்போது இன்ஸ்டாவில் மட்டுமன்றி பல்வேறு சமூகவலைதளத்திலும் ட்ரெண்டாகி வருகிறது. அதன் விளைவாக இன்ஸ்டாவில் மிக வேகமாக 1 மில்லியன் (99 நிமிடங்கள்) ஃபாலோயர்ஸை பெற்றவர்கள் பட்டியலில் விஜய் மூன்றாவது இடத்தில் இருப்பதாக அவரது ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அளவிலும், கோலிவுட் அளவிலும் விஜய் இந்த விஷயத்தில் முதலிடம் என்றும் சொல்லப்படுகிறது.

விஜய்க்கு முன்னதாக BTS V (43 நிமிடங்கள்), Angelina Julie (59 நிமிடங்கள்) ஆகியோர் உள்ளனர். விஜய்யின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அளவுக்கே, முதல் போஸ்டுக்கும் லைக்கள், கமெண்டுகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி அதிக 1 லட்சம் கமெண்ட்ஸ் பெற்றவர் பட்டியலிலும் இந்தியாவில் விஜய் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு ட்விட்டரில் மட்டுமே ஆக்டிவாக இருக்கும் விஜய்க்கு, ட்விட்டரில் 4.4 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். ட்விட்டரில் தனது பட அப்டேட்களை மட்டுமே ஷேர் செய்துவருகிறார் விஜய்.

தொடர்ந்து விஜய்யின் பெர்சனல் அப்டேட்கள், லியோ அப்டேட்கள் போன்றவை அவர் இன்ஸ்டா பேஜில் அடிக்கடி வருமா என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்! இன்னொரு பக்கம், ட்விட்டரில் #ThalapathyOnINSTAGRAM என்ற ஹேஷ்டேக் வேகவேகமாக ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com