‘தளபதி 66’ ஸ்பாட்டிலிருந்து அடுத்த லீக் - விஜய், ராஷ்மிகா மந்தனா ஜோடியின் ஃபோட்டோஸ் வைரல்

‘தளபதி 66’ ஸ்பாட்டிலிருந்து அடுத்த லீக் - விஜய், ராஷ்மிகா மந்தனா ஜோடியின் ஃபோட்டோஸ் வைரல்
‘தளபதி 66’ ஸ்பாட்டிலிருந்து அடுத்த லீக் - விஜய், ராஷ்மிகா மந்தனா ஜோடியின் ஃபோட்டோஸ் வைரல்

நடிகர் விஜயின் ‘தளபதி 66’ படப்பிடிப்பு தளத்திலிருந்து அடுத்தடுத்து நடிகர்கள் நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் நாள்தோறும் வெளிவருவது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி இயக்கும் புதியப் படத்தில், நடிகர் விஜய் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த்ப்படத்தைப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையொட்டி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் ஷுட்டிங் முடிந்து, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பின்னர் மீண்டும் ஹைதராபாத்தில் ஷுட்டிங் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் காட்சிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக நாள்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்தவகையில், நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏற்கெனவே அவரது ரசிகர்கள் இவ்வாறு புகைப்படங்கள் வெளியாவதை தடுக்க படக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மற்றும் இயக்குநர் வம்சி பைடிபள்ளியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com