எங்க ஆட்டம் வெறித்தனம் மாஸ் காட்டிய பிகில் ட்ரைலர் 

எங்க ஆட்டம் வெறித்தனம் மாஸ் காட்டிய பிகில் ட்ரைலர் 
எங்க ஆட்டம் வெறித்தனம் மாஸ் காட்டிய பிகில் ட்ரைலர் 

அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணி பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது முதல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிடுகிடுவென எகிறியது. விஜய் ரசிகர்கள் இவ்வளவு எதிர்பார்ப்புடன் இருந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.

தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றது. ஆனால், இதுவரை டீஸர் கூட வெளியாகவில்லை. நேரடியாக ட்ரெய்லர் தான் என்பது உறுதியாகிவிட்டது. ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள், ஆடியோ ரிலிஸ் என எல்லாவற்றை பிரம்மாண்டமாகவும், அதிரடியாகவும் வெளியிட்டு வந்த படக்குழு, ட்ரெய்லரை தாமதப்படுத்திவிட்டதாக ரசிகர்கள் சற்றே கோபத்தில் இருந்தார்கள். 

ட்ரெய்லர் வெளியாவதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #Bigiltrailerday , #podravediya போன்ற ஹேஷ்டேக்குகளை தேசியளவில் டிரெண்ட் செய்தனர். மேலும், இன்னும் 50 நிமிஷத்தில் பிகில் டிரைலர் என கவுண்ட்டவுன் தொடங்கினர். ஏற்கனவே ட்ரெய்லருக்கு நான்கு போஸ்டர்கள் மேல் வெளியிட்டு படக்குழு ஹைப் ஏற்றியிருந்தது. 

இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் பிகில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே ட்ரெய்லர் பட்டய கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர். ரகுமானின் பிரம்மாண்டமான பின்னணி இசைதான்.

படத்தில் அதிரடியாக சண்டை காட்சிகள் இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. ட்ரெய்லரில், ‘இந்த விளையாட்டால் தான் உங்க அடையாளமே மாறப்போகுது’, ‘எங்களுக்கு புட்பால் லாம் தெரியாது எங்க ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்’ போன்ற சார்ப்பான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. 

‘ரொம்ப ஆக்‌ஷன் ஆகிட்ட பிகிலு, காதலுக்கு மரியாதைலா உனக்கு மறந்துபோச்சு’ என நயன்தாரா பேசும் வசனம் ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதை உறுதி செய்கிறது. ‘பிகில் பிரைட் ஆஃப் த நேஷன்’ என்ற வசனம் படத்தில் விஜய் இந்திய அளவில் புகழ்பெற்ற புட்பால் வீரராக இருக்கிறார் என்பது சொல்கிறது. கால்பந்து வீரராக, பயிற்சியாளராக இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்தில் சற்றே அதிரடியாகவும் விஜய் காட்சி அளிக்கின்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com