2023 பொங்கலுக்கு ரிலீஸ்.. மாஸான அப்டேட் கொடுத்த ‘தளபதி 66’ படக்குழு

2023 பொங்கலுக்கு ரிலீஸ்.. மாஸான அப்டேட் கொடுத்த ‘தளபதி 66’ படக்குழு
2023 பொங்கலுக்கு ரிலீஸ்.. மாஸான அப்டேட் கொடுத்த  ‘தளபதி 66’ படக்குழு

’தளபதி 66’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 13ஆம் தேதி வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, நடிகர் விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் புதியப் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜூ தயாரிக்கிறார்.

தற்காலிகமாக ‘தளபதி 66’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக, பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதேபோல் இந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷாம் நடிக்கிறார். சீனியர் நடிகரான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குடும்ப பின்னணி படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் நிறைவடைந்தது.

அதனைத்தொடர்ந்து‘தளபதி 66’ படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்ததாக தகவல் வெளியானது. நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அந்த பதிவின் மூலம் இதனை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் பிரபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது ‘தளபதி 66’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில், இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com