‘கே.ஜி.எப் சண்டைக் காட்சிகளையே மறந்துவிடுவீர்கள்!’ - 'விஜய் 65' ஸ்டண்ட் குறித்து நெல்சன்

‘கே.ஜி.எப் சண்டைக் காட்சிகளையே மறந்துவிடுவீர்கள்!’ - 'விஜய் 65' ஸ்டண்ட் குறித்து நெல்சன்

‘கே.ஜி.எப் சண்டைக் காட்சிகளையே மறந்துவிடுவீர்கள்!’ - 'விஜய் 65' ஸ்டண்ட் குறித்து நெல்சன்
Published on

’விஜய் 65’படத்தின் சண்டைக் காட்சிகளைப் பார்த்த பின்னர், கே.ஜி.எப் சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என அந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார்.

‘கோலமாவு கோகிலா’,‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ‘நெல்சன் திலீப்குமார்’ இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. நாயகிக்கான தேர்வில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 'விஜய் 65' படத்தின் சண்டை இயக்குநராக அன்பறிவு பணியாற்ற உள்ள நிலையில், படத்தின் சண்டைக் காட்சிகள் அதிரடியாக இருக்கும் என அந்தப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் வெளியிட்ட செய்தியில் படத்தின் இயக்குநர் நெல்சன் கூறும்போது, “ விஜய் 65 படத்தின் சண்டைக்காட்சிகள் அதிரடியாக இருக்கும். விஜய் 65 படத்தின் சண்டைக் காட்சிகளை பார்த்த பின்னர், கே.ஜி.எப் படத்தின் சண்டைக்காட்சிகளை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள்.

அடுத்தடுத்து ஆக்‌ஷன் ட்ராமா கதையாக இந்தப்படம் இருக்கும்” என்று கூறியுள்ளார். முன்னதாக மெட்ராஸ், கே.ஜி.எப் உள்ளிட்ட பல படங்களுக்கு அன்பறிவு சண்டை இயக்குநர்களாக பணியாற்றிய நிலையில், கே.ஜி.எப் படத்தின் சண்டைக் காட்சிகள் பெரிதளவு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

courtesy:https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/thalapathy-65-to-have-exceptional-stunts-than-kgf/articleshow/81184692.cms 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com