‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்

‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்

‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்
Published on

‘விஜய்64’ படத்தின் இயக்குநர் யார் என்பது பற்றி தகவல் கசியத் தொடங்கியுள்ளது.

தற்போது விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து ‘விஜய்63’ படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த பஞ்சாயத்து இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ‘விஜய்64’ படத்தின் இயக்குநர் யார் என்பது பற்றிய செய்திகள் வலம் வர தொடங்கி விட்டன. 

விஜய் 63வது படத்தில் ‘சதுரங்கவேட்டை’ இயக்குநர் வினோத் படத்தில் நடிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய இந்தத் தகவல் உறுதி என்றே தெரிகிறது. இந்தப் படத்தினை சங்கிலி முருகன் தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. இதற்கு இடையில் அட்லியின் பெயரும் அடிப்பட்டு வந்தது. ஆனால் அந்தத் தகவல் எந்த அளவுக்கு உறுதியானது என்பதில் சிக்கல் நீடிக்கிறது. வசூல் ரீதியாக ‘மெர்சல்’ வெற்றிப் படமாக அமைந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் அது வெளியாகவில்லை. ஆகவே தயாரிப்பு அளவில் கையை கடித்தது. எனவே தன்னால் ஏற்பட்ட சங்கடங்களை சரி செய்யும் நோக்கில் விஜய், மீண்டும் இயக்குநர் அட்லிக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நஷ்டக் கணக்கை சரி செய்யலாம் என திட்டமிடுகிறார் எனக் கூறப்பட்டது. ஆனால் விஜய்யின் வட்டாரம் அதனை இல்லை என்றே மறுக்கிறது. 

இந்நிலையில் ‘விஜய்63’ படத்தை வினோத் இயக்குவது உறுதிதான் என்கிறனர் விஜய் வட்டாரத்தினர். அதைத்தொடர்ந்து ‘விஜய்64’ படத்தை மோகன் ராஜா இயக்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மோகன் ராஜா தனது படக்குழுவினருடன் கடுமையான கதை விவாதத்தில் இருக்கிறார். விஜய்யே அவரை அழைத்து, “நான் (‘விஜய்64’) உங்களுடன் இணைகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று வாக்குறுதி கொடுத்திருப்பதால் அவரது குழுவினர் உற்சாகமாக கதைக் காட்சிகளை தீர்மானிப்பதில் வேகம் காட்டி வருகிறார்கள்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com