‘தளபதி 64’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘தளபதி 64’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
‘தளபதி 64’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘பிகில்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் ரம்யா, ஆன்ட்ரியா, சாந்தனு, உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர். படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். எனவே படத்தின் எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ இதனை தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதில் கல்விமுறைக்குள் நடக்கும் ஊழலை எதிர்க்கும் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி பங்கேற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்நிலையில், ‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு
அறிவித்துள்ளது. இதுகுறித்த போஸ்டரை படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com