இன்று வெளியாகும் விஜய்யின் தளபதி 63 அப்டேட் ! என்ன தெரியுமா ?

இன்று வெளியாகும் விஜய்யின் தளபதி 63 அப்டேட் ! என்ன தெரியுமா ?
இன்று வெளியாகும் விஜய்யின் தளபதி 63 அப்டேட் ! என்ன தெரியுமா ?

தெறி, ‘மெர்சல்’ ஆகிய இருப்படங்களை அடுத்து விஜயை வைத்து மீண்டும் இயக்குநர் அட்லீ ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ஆகவே இப்படம் குறித்த செய்திகள் ‘தளபதி63’ என்றே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. ‘சர்கார்’ வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் என்பதால் இப்படம் குறித்து அவரது ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட வீரராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே அதற்கான காட்சிகளை படமாக்க பிரம்மாண்டமான கால்பந்தாட்ட அரங்கம் ஒன்றை படக்குழு அமைத்துள்ளது. ‘தளபதி63’ல் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் காமெடி நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22-ம் தேதியன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 63 குறித்த அப்டேட் எதாச்சும் தாருங்கள் என விஜய் ரசிகர்கள் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியை ட்விட்டரில் டேக் செய்து துளைத்து எடுத்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். அவர்களுக்கு பதிலளித்த அர்ச்சனா "நீங்கள் மறந்திருப்பீர்கள், தயாரிப்பாளரிடமிருந்து படத்தைப் பற்றிய அப்டேட் பெற்றுத் தருவது நானாகத்தான் இருப்பேன். ‘தளபதி 63’ படம் குறித்த அப்டேட் சரியான நேரத்தில் கிடைக்கும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் இரவுபகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஆனாலும் விடாத விஜய் ரசிகர்கள் டவிட்டரில் #Thalapathy63Updateday என்ற ஹாஷ்டேக்கை தேசியளவில் டிரெண்ட் செய்துள்ளனர். இந்நிலையில் தளபதி 63 படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்த அப்டேட் படத்தின் டைட்டிலாக இருக்குமா ? போஸ்டராக இருக்குமா ? அல்லது பாடலாக இருக்குமா என்று விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com