\
நாளை ‘தளபதி 62’ பட பூஜை துவக்கம்..!

நாளை ‘தளபதி 62’ பட பூஜை துவக்கம்..!

நாளை ‘தளபதி 62’ பட பூஜை துவக்கம்..!
Published on

விஜயின் ‘தளபதி 62’ படத்திற்காக படபூஜை நாளை துவங்குகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் பூஜை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது. அதனையடுத்து விஜய் சில மாதம் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் விஜயின் 62-வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இதற்கான பூஜை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘கத்தி’ திரைப்படம் செம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘தளபதி62’ படத்திற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் ஏவி.எம் ஸ்டியோவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com