‘எம்ஜிஆர்’ ஆகவே மாறிய அரவிந்த் சாமி - கலக்கும் ‘தலைவி’ புதிய டீசர்

‘எம்ஜிஆர்’ ஆகவே மாறிய அரவிந்த் சாமி - கலக்கும் ‘தலைவி’ புதிய டீசர்

‘எம்ஜிஆர்’ ஆகவே மாறிய அரவிந்த் சாமி - கலக்கும் ‘தலைவி’ புதிய டீசர்
Published on

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளினை முன்னிட்டு, ‘தலைவி’ படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை இன்று பலரும் படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் விஜய், “தலைவி” என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.

எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ‘தலைவி’ படத்தில் இடம்பெறும் எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டு இருந்தார். எம்.ஜி.ஆர் தோற்றத்தை பெருமளவு ஒத்துப்போகும் அளவிற்கு அரவிந்த் சாமியின் வேடம் இருப்பதாக என பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், தலைவி படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த டீசர் வெளியானது. இதில், ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..’ பாடல் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அரவிந்த் சாமி என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, அச்சு அசலாக எம்.ஜி.ஆர் போலவே அவர் காட்சியளிக்கிறார். இந்த டீசருக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கங்கனா ரனாவத் தோற்றம் ஜெயலலிதாவைப்போல் இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை சரி செய்யும் வகையில் அரவிந்த் சாமியின் தோற்றத்தை எம்ஜிஆர்போல் நன்றாக வடிவமைத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com