''ஜெயலலிதா போலவே கங்கனா இருக்கிறார்'' - தலைவி போஸ்டருக்கு குவியும் பாராட்டுகள்..!
தலைவி படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் விஜய், “தலைவி” என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். எம்ஜிஆர் பிறந்த நாளின்போது வெளியான அரவிந்த் சாமியின் லுக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
(புதிய போஸ்டரில் கங்கனாவின் தோற்றம்)
இந்நிலையில், தலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கங்கனாவின் தோற்றம், ஜெயலலிதாவைப் போலவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக வெளியான ஒரு புகைப்படத்தில் கங்கனா ஜெயலலிதா போல இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.