ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' யின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ’தலைவி’ என்ற படம் உருவாகி வருகிறது. ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இவர், தமிழில் ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை விஜய் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்காக கங்கனா தமிழ், பரதநாட்டியம் ஆகியவை கற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கை வரை என்பது போல ஃபர்ஸ்ட் லுக் டீசர் அமைந்துள்ளது. பேனரில் பொருத்தப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படம் போல ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது. இந்தப்படம் 2020 ஜூன் 26-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.