Rana Denizer உருவாக்கியுள்ள சீரிஸ் `Letters from the Past'. அம்மாவின் 20 ஆண்டு பழைய கடிதங்களை பார்க்கும் மகள் பற்றிய கதை.
Sterling K. Brown, Tom Ellis, Rupert Graves நடித்துள்ள சீரிஸ் `Washington Black'. George Washington என்ற பதினொரு வயது சிறுவனின் அட்வென்சர் பயணமே கதை.
வாணி கபூர் நடித்துள்ள சீரிஸ் `Mandala Murders'. துப்பறிவாளர்கள் ரேயா - விக்ரம் மர்மம் ஒன்றை துப்புதுலக்குவதே கதை.
வினீத் குமார் சிங் நடித்துள்ள சீரிஸ் `Rangeen'. தன் மனைவியின் துரோகத்தை தாங்காத கணவன் என்ன செய்கிறான் என்பதே கதை.
கையோஸி இராணி இயக்கத்தில் பிரித்விராஜ், கஜோல், இப்ராஹிம் நடித்துள்ள படம் `Sarzameen'. ஒரு ராணுவவீரன் சந்திக்கும் சிக்கல்களே படம்.
ஷாஹி கபீர் இயக்கத்தில் திலீஷ் போத்தன், ரோஷன் மாத்திவ் நடித்த படம் `Ronth'. இரவு நேர ரோந்து செல்லும் இரு காவலர்களை பற்றிய கதை.
Brad Furman இயக்கியுள்ள படம் `Tin Soldier'. தன் சக போராளிகளை ஏமாற்றியவனை தேடி பழிவாங்கும் ஒரு நபரின் கதை.
Robert Olsen இயக்கத்தில் Jack Quaid நடித்த படம் `Novocaine’. வலியை உணர முடியாத ஹீரோ, அதையே ஒரு சூப்பர்பவர் போல் பயன்படுத்து, தன் காதலியை கடத்தி சென்றவர்களிடம் மோதுகிறார்.
பவன் கல்யாண் நடித்துள்ள படம் `Hari Hara Veera Mallu'. முகலாயர்களை எதிர்த்து போராடும் கலகக்காரரின் கதை.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள படம் `தலைவன் தலைவி'. கணவன் மனைவிக்கு இடையே வரும் மோதல்களே கதைக்களம்.
சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் பாசில் நடித்துள்ள படம் `மாரீசன்'. வேலாயுதத்திடம் உள்ள பணத்தை திருட, தயா நல்லவன் போல அவருடன் பயணிக்கிறான். இந்தப் பயணத்தில் நடப்பவையே கதை.
அஷ்வின் குமார் இயக்கியுள்ள அனிமேஷன் படம் `Mahavatar Narsimha'. ஹிரண்ய காஷ்யப் - விஷ்ணு பற்றிய கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.
The Fantastic Four படத்தின் இரண்டாவது ரீபூட் தான் The Fantastic Four: First Steps. டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஏற்ப இம்முறை நான்கு ஹீரோக்களும் மார்வல் யுனிவர்ஸ்க்குள் என்ன செய்கிறார்கள் என்பதே கதை.