‘அஜித் வில்லன் கேரக்டரை கெத்தாக செய்வார்’ ஜோக்கர் ஹீரோவுடன் ஒப்பிட்ட பார்த்திபன்..!

‘அஜித் வில்லன் கேரக்டரை கெத்தாக செய்வார்’ ஜோக்கர் ஹீரோவுடன் ஒப்பிட்ட பார்த்திபன்..!

‘அஜித் வில்லன் கேரக்டரை கெத்தாக செய்வார்’ ஜோக்கர் ஹீரோவுடன் ஒப்பிட்ட பார்த்திபன்..!
Published on

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வார்த்தைகளின் சித்தர். யாரையும் பாராட்டுவதில் மேடையில் வீசுகின்ற மெல்லிய பூங்காற்றாக இருப்பார். தற்போது நடிகர் அஜித்குமாரின் நடிப்பை வானளாவப் புகழ்ந்துத் தள்ளியிருக்கிறார்.

நீ வருவாய் என, உன்னைக் கொடு என்னைத் தருவேன் போன்ற படங்களில் அஜித்துடன் நடித்துள்ள பார்த்திபன், கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நேர்கொண்ட பார்வையில் அவரது நடிப்பைப் பார்த்து பிரமித்துவிட்டார். ஜோக்கர் படத்தில் நடித்த ஹாலிவுட் கலைஞன் ஜோவாகின் பீனிக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு அஜித் திறமையானவர் எனப் பாராட்டியுள்ளார்.

அஜித்துடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட பார்த்திபன், “அதுவொரு மகிழ்ச்சியான விஷயம். அவருடைய அரும்பு நாட்களில் நான் உணர்ந்த அனுபவம். இரண்டு படங்களில் அஜித்துடன் நடித்திருந்தாலும், மீண்டும் அவருடன் நடிப்பதை விரும்புகிறேன்” என்று ஆசைப்படுகிறார்.  

அஜித் படத்தில் வில்லனாக நடிக்கவேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்திற்குப் பதிலளித்த பார்த்திபன், “எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் நான் வில்லனாக நடிக்கமுடியும். ஆனால் என்னைவிட அஜித் சிறப்பாக வில்லனாக நடிப்பார். அதனால் நான் ஹீரோவாக ஆசைப்படவில்லை. அவர் அதில் சிறப்பானவர் என்று சொல்கிறேன். ஒருவரை ஹீரோவாக மாற்ற நிறைய வேலைகள் செய்யவேண்டியுள்ளது. ஆனால் வில்லனாக நடிப்பதற்கு சிறந்த நடிப்புத்திறன் வேண்டும். அதனால்தான் அஜித் வில்லனாக முடியும் என்கிறேன்” என்று தன் பாணியில் பேசியுள்ளார். 

எஸ்ஜே. சூர்யா இயக்கிய வாலி படத்தில் அஜித் நடிப்புப் பற்றி குறிப்பிட்ட பார்த்திபன், “ஜோக்கர் போன்ற ஒரு படத்தில் அவர் நடித்தால் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுப்பார். அப்படியொரு கேரக்டரில் அஜித் நடித்தால் தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள்” என்று நெகிழ்ந்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com