துப்பாக்கி சுடுதலில் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் அஜித் - வைரலாகும் புகைப்படம்

துப்பாக்கி சுடுதலில் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் அஜித் - வைரலாகும் புகைப்படம்
துப்பாக்கி சுடுதலில் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் அஜித் - வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித். நடிப்பு மட்டுமல்லாது பைக் ரேஸ், ஏரோ மாடலிங், போட்டோகிராபி, சமையல் உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்தி வரும் கடந்த சில வருடங்களாக, துப்பாக்கிச் சுடுதலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சென்னை எக்மோரில் உள்ள ரைபிள் கிளப்பில் உறுப்பினராக சேர்ந்து துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி எடுத்து வரும் அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட கோவை மற்றும் டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

தற்போது துப்பாக்கி சுடுதலின் அடுத்தக்கட்டப் போட்டிகளில் பங்கேற்க பயிற்சி எடுத்து வரும் அஜித், தற்போது ரைபிள் துப்பாக்கியிலிருந்து அடுத்தக்கட்ட நவீன துப்பாக்கிகளில் பயிற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவர் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரித்து, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தில் ஹூமா குரேஷி, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com