இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அஜித்: என்ன ஸ்பெஷல்?
தமிழகம் அல்ல இந்திய அளவில் 26 வருடங்கள் ஈடு இணையில்லா அஜித் (#26YrsOfUnparalleledAJITH) என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழகத்தில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள நடிகர் அஜித். பொதுவாக ஏதேனும் நடிகரின் படமோ அல்லது பிறந்த நாளோ வந்தால் அது ட்விட்டரில் ட்ரெண்டாகும். ஆனால் அஜித்குமாருக்கு மட்டும் சிறுசிறு விஷயங்கள் கூட ட்ரெண்டாகிறது. அந்த வகையில் தற்போது இந்திய அளவில் 26 வருடங்கள் ஈடு இணையில்லா அஜித் (#26YrsOfUnparalleledAJITH) என்ற இன்று ட்ரெண்டாகியது. இது எதற்காக ட்ரெண்டாகிறது என்றால், அஜித் முதன்முதலில் படம் நடிக்க ஒப்பந்தம் ஆகிய தினம் ஆகஸ்ட் 3ஆம் தேதி.
அஜித் படத்திற்காக நடிக்க ஒப்பந்தமாகி நாளையுடன் 26 வருடங்கள் ஆகிறது. இதைத்தான் அஜித் ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாக்கியுள்ளனர். இந்த ஹேஷ்டேக் சென்னை அளவிலும் இந்திய அளவிலும் ட்ரெண்டாகியுள்ளது. இந்த ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள், அவரது படங்கள் மற்றும் எளிமை உள்ளிட்ட சில விஷயங்களை புகழ்ந்து வருகின்றனர்.