நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில் அகினேனிக்கு அம்மாவாக தபு நடிக்கவிருக்கிறார்.
நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில் அகினேனி நடித்து வரும் புதிய படத்தை தெலுங்கில் விக்ரம்.கே.குமார் இயக்கிவருகிறார். இந்தப்படத்தை நாகர்ஜூனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது.
இந்தப்படத்தில் நடிகை தபு அகிலின் தாயாக நடிக்க இருக்கிறாராம். நாகர்ஜூனாவுடன் பல படங்களில் இணைந்து நடித்த தபு அந்த நட்புக்காகவே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்தப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடைபெற உள்ளது. அவரது கால கட்ட நடிகையான கஜோல் தனுஷ் நடிக்கும் வி.ஐ.பி-2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.