கை ரிச்சி இயக்கத்தில் டாம் ஹார்டி, ப்ரின்ஸ் ப்ராஸ்னன் நடித்துள்ள சீரிஸ் `MobLand’. கேங்ஸ்டர் ட்ராமாவாக உருவாகியிருக்கிறது.
Zoe Robyn உருவாக்கியுள்ள சீரிஸ் `Pulse’. மயாமியில் இருக்கும் மருத்தமனை ஊழியர்கள் பற்றிய கதை.
ஸ்ரீகாந்த் இயக்கத்தில் ராஜீவ் கனகாலா, ஜான்சி நடித்துள்ள சீரிஸ் `Home Town'. சொந்த ஊரின் நினைவுகள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய கதை.
நவ்தீப், தீக்ஷித் நடித்திருக்கும் சீரிஸ் `Touch Me Not'. சூப்பர் பவர் கொண்ட ஒரு இளைஞன் பற்றிய கதை.
lee Il-hyung இயக்கியுள்ள சீரிஸ் `Karma’. விபத்து ஒன்று ஆறு நபர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. அது என்ன என்பதே கதை.
சஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், சித்தார்த் நடித்துள்ள படம் `டெஸ்ட்’. மூன்று மனிதர்களின் வாழ்க்கை ஒரு சர்வதேச க்ரிகெட் போட்டியில் சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர்கள் எடுக்கும் ஒரு முக்கிய முடிவு என்ன? அதன் விளைவு என்ன என்பதே கதை.
Hyeok-Jae Kwon இயக்கிய படம் `Dark Nuns'. Hee-Joon என்ற சிறுவனை பீடித்திருக்கும் தீய சக்தியை துரத்தும் முயற்சிகளே கதை.
Clint Eastwood இயக்கத்தில் Nicholas Hoult நடித்த படம் `Juror #2'. காதலியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் ஜேம்ஸ். இந்த வழக்கின் கோர்ட் விசாரணையில் ஜூரிகளில் ஒருவராக கலந்து கொள்கிறார் ஜஸ்டின். அவருக்கும் இவ்வழக்கிற்குமான ஒரு சம்பந்தம் தான் கதையே.
Jesse Eisenberg இயக்கத்தில் Kieran Culkin நடித்த படம் `A Real Pain'. கசின்ஸ் இருவர் இணைந்து டூர் செல்கின்றனர், அது அவர்களின் குடும்பத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளும் ஒரு பயணம். இது அவர்களுக்குள் ஏற்படுத்தும் தாக்கமே கதை.
அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஜுனைத் கான், குஷி கபூர் நடித்த படம் `Loveyapa'. தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த `லவ் டுடே' படத்தின் இந்தி ரீமேக் தான் இது. காதல் ஜோடிக்குள் வரும் மோதலும், கூடலுமே கதை.
சதாசிவம் இயக்கியுள்ள படம் `EMI'. மாதத்தவணையில் வாழ்க்கை நடத்தும் ஒரு இளைஞனின் கதை.
Jared Hess இயக்கியுள்ள படம் `A Minecraft Movie'. ஒரு குழு வினோதமான இடத்தில் சிக்கிக் கொள்கிறது. அங்கிருந்து தப்பிக்கும் அட்வெஞ்சரே கதை.