சிபி சத்யராஜின் நடிப்பில் க்ரைம் திரில்லர்...'டென் ஹவர்ஸ்': ட்ரைலர் வெளியானது!
பேருந்தில் நடக்கும் கொலையின் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் திரைப்படம்தான் ’டென் ஹவர்ஸ்’. புதுமுக இயக்குனர் இளையராஜா கலியப்பெருமான் இயக்கத்தில் சிபிராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான 'வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டென் ஹவர்ஸ் என்ற க்ரைம் திரல்லர் படத்தில் நடித்துள்ளார்.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலன்று வெளியாகாது என்ற படக்குழு அறிவித்த நிலையில், பல திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளன. இந்தவரிசையில், டென் ஹர்வர்ஸ் படமும் பொங்கல் அன்று திரையில் தோன்றும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை, பிரபல இயக்குநர் லோகேஸ் கனகராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுக்குறித்த பதிவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள சிபி சத்யராஜ் லோகேஸ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.