\
காமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை

காமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை

காமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை
Published on

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் தற்போது உடல் நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்து ள்ளனர். 

தமிழில், கில்லி, சரோஜா, மொழி, பயணம், வானம், வாலு, தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்ப வர்  நடிகர் பிரம்மானந்தம். தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான இவருக்கு வயது 62. பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர்.

கடந்த ஞாயிறு அன்று இவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு சோத னைகள் எடுக்கப்பட்ட பின், அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்யப்பட வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து மும்பையில் உள்ள ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அவருக்கு திங்கட்கிழமை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிரபல இதய நோய் மருத்துவர் ராமகந்தா பாண்டா இந்த சிகிச்சையை மேற்கொண்டார். 

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர், தற்போது உடல்நிலை தேறி வருகிறார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மகன்கள் ராஜ கவுதம், சித்தார்த் உடனடிருந்து அவரை கவனித்து வருகின்றனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com