மாரி பட இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட நடிகை! ஏன் தெரியுமா?

இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட புகாரில் நடிகை கல்பிகா கணேஷ் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

'காதலில் சொதப்புவது எப்படி', 'மாரி', 'மாரி 2' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி மோகன், துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவர் குறித்தும் தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் அவதூறு கருத்துகளை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். இதனையடுத்து அவர் மீது பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது நடிகை கல்பிகா கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவர் குறித்தும் வெளியிட்ட வீடியோக்களை நீக்கிவிட்டதாகவும், இதற்கு மன்னிப்புகோரி புதிய வீடியோவை வெளியிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com