\
நடிகர் பிரபாஸ்-க்கு விரைவில் முழங்கால் அறுவை சிகிச்சை!?

நடிகர் பிரபாஸ்-க்கு விரைவில் முழங்கால் அறுவை சிகிச்சை!?

நடிகர் பிரபாஸ்-க்கு விரைவில் முழங்கால் அறுவை சிகிச்சை!?
Published on

தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு விரைவில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் , இதனால் சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே படப்பிடிப்பில் பாதிப்பு ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ராஜமவுலி இயக்கிய “பாகுபலி” திரைப்படம் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். அவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. சுமார் 200 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்ததாக கூறப்பட்டது. தற்போது பிரபாஸுக்கு விரைவில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் அதற்காக அவர் அமெரிக்கா கிளம்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஜீத் இயக்கிய சாஹோ படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளின் போது நடிகர் பிரபாஸ்க்கு காலில் காயம் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், சரியான நேரம் அமையாததால் பிரபாஸ் அதைத் தள்ளிப்போட்டார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படங்கள் பல நிலுவையில் இருந்ததால் சிகிச்சையை தள்ளிப்போட்டார். பின்னர் அந்த படங்களில் நடித்து முடித்தபின் கோவிட் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்பட்டன. இப்போது அவர் இறுதியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள பிரபாஸ் முடிவு செய்துள்ளார்.

மிகவும் கடினமான அறுவை சிகிச்சை என்பதால் 3 மாதங்களுக்கு முழு படுக்கை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக பிரசாந்த் நீலின் “சலார் ” மற்றும் நாக் அஸ்வினின் “ப்ராஜெக்ட் கே” ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்படும். இப்படங்களின் ஷூட்டிங் ஷெட்யூல்களை தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சிகிச்சை முடிந்து ஓய்வுக்கு பின் அவர் வழக்கம்போல் படப்பிடிப்பில் பங்கேற்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com