’இதே வேலையா போச்சு’ - மேடையிலேயே நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பாலைய்யா.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா, நேற்றை தினத்தில் நடைப்பெற்ற ஒரு புரோமஷன் விழாவில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 நந்தமுரி பாலகிருஷ்ணன்
நந்தமுரி பாலகிருஷ்ணன்முகநூல்

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, நேற்றை தினத்தில் நடைப்பெற்ற ஒரு புரோமஷன் விழாவில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிட்டதட்ட 40 வருடங்களாக தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரா வலம் வருபவர்தான் நந்தமுரி பாலகிருஷ்ணா. தனது 63 வயதிலும் கூட இளம் கதாநாயகர்களுக்கு இணையாக நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் வைத்த பெயர் பாலைய்யா.

இந்தவகையில், தெலுங்கில் விஷ்வக் சென், அஞ்சலி, நேஹா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி” திரைப்படத்தின் பிரமோஷன் விழா நேற்று நடைப்பெற்றது. இதில், நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது, மேடையில் ஏறுகையில் இடமில்லை கூறிய பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியையும், நேஹா ஷெட்டியையும் சிறிது நகர்ந்து நிற்குமாறு கூறினார். அப்போது, அஞ்சலில் மெதுவாக நகர்ந்து நிற்கவே, கடுப்பான பாலகிருஷ்ணா சட்டென அஞ்சலியை பிடித்து தள்ளி விட்டதுபோல் இருந்தது.

 நந்தமுரி பாலகிருஷ்ணன்
“வெற்றிமாறன், பா. ரஞ்சித் இயக்கினால் மோடியின் சுயசரிதையில் நடிப்பேன்!” வதந்தியை மறுத்த சத்யராஜ்!

இதனால் பதறிய அஞ்சலி, பிறகு அதனை கண்டுக்கொள்ளாமல் விளையாட்டாக எடுத்து கொண்டார். சிரித்தபடியே இருந்தார்.

இருப்பினும், பாலகிருஷ்ணாவின் முகத்தில் கோபம் குறையாமல், அஞ்சலியை திட்டுவது போல முகத்தை வைத்து கொண்டது காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பாலைய்யாவின் இந்த சபை நாகரீகம் அற்ற செயல் இது முதல் முறை அல்ல, அவ்வப்போது இது போன்ற ஒரு சில செயல்களை செய்து அடிக்கடி சிக்குவது வழக்கம். இந்நிலையில், தற்போது, இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், ’இதுயெல்லாம் ஒரு முன்னணி நடிகர் செய்யும் வேலையா?.’ என்று பாலகிருஷ்ணனை நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com