தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபு. நடிகரும் தயாரிப்பாளருமான இவர், தமிழில் ’விழித்திரு’ படத்தில் நடித்துள்ளார்.
இவர் மகள் நிஹாரிகா கோனிடேலா தமிழில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். புதுமுகம் ஆறுமுக குமார் இதை இயக்குகிறார்.
நிஹாரிகா கூறும்போது, ’தெலுங்கில் 2 படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். தமிழில் இது எனக்கு முதல் படம். இதில் சிறந்த டீம் அமைந்திருக்கிறது. என் குடும்பத்தில் எல்லோரும் தமிழ் பேசுவார்கள். எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களுடன் நடிப்பது அருமையான அனுபவம். இப்படத்தில் என் கேரக்டர் இரண்டு பெயர்களில் வரும். ஏன் என்பது கதை தொடர்பானது. சினிமா குடும்பம் என்பதால் என் குடும்பத்தினர் எனக்கு நன்றாக ஆதரவளிக்கின்றனர்’ என்றார்.