மகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்

 மகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்

 மகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்
Published on

தன் மகளை ‘பிகில்’ ட்ரெய்லரில் பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன என நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘பிகில்’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே ட்ரெய்லர் அதிரடியாய் அமைந்தது. ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான பின்னணி இசை, விஜயின் மாஸ் காட்சிகள், பட்டையை கிளப்பும் வசனங்கள் என ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் தீபாவளிக்கு ‘பிகில்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. 

‘பிகில்’ திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக விஜய் இருப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவரிடம் பயிற்சி பெறும் பெண்களில் ஒருவராக நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்துள்ளார். ட்ரெய்லரில் வரும் ''எங்க அப்பாவும் குண்டு; எங்க அம்மாவும் குண்டு; பின்ன நான் எப்படி இருப்பேன்'' என்ற வசனம் மூலம் பலரது கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரோபோ சங்கர், என் மகளை ‘பிகில்’ ட்ரெய்லரில் பார்த்ததும் என் கண்கள் கலங்கிவிட்டன. இந்த வாய்ப்பை கொடுத்த அட்லீ மற்றும் விஜய்க்கு நன்றி. ட்ரெய்லர் அற்புதமாக உள்ளது என தெரிவித்துள்ளார். அவரது பதிவுக்கு பதில் அளித்துள்ள பலரும் ரோபோ சங்கரின் மகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com