\
ஸ்ருதிஹாசனுக்கு டாட்டூ கொடுக்கும் இம்சை!

ஸ்ருதிஹாசனுக்கு டாட்டூ கொடுக்கும் இம்சை!

ஸ்ருதிஹாசனுக்கு டாட்டூ கொடுக்கும் இம்சை!
Published on

நடிகைகள் தங்கள் உடலில் டாட்டூ குத்திக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்தி நடிகைகள் மட்டும்தான் ஆரம்பத்தில் இதை செய்து வந்தனர். இப்போது அனைத்து மொழி நடிகைகளும் டாட்டூ குத்திக்கொள்கின்றனர். அதில் ஒருவர் ஸ்ருதி. இவர் தனது உடலில் பல இடங்களில் டாட்டூ குத்தியிருக்கிறார். இந்த டாட்டூ பெரும் இம்சையாக இருக்கிறது என்று இப்போது அவர் கூறியுள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ’நான் 5 இடங்களில் டாட்டூ குத்தியிருக்கிறேன். எனது மணிகட்டு, காதுக்கு பின் பக்கம், கால், முதுகு, என் தோள் ஆகிய இடங்களில் டாட்டு குத்தியிருக்கிறேன். தோளில் ஸ்ருதி என தமிழில் எழுதி வைத்திருக்கிறேன். மணிகட்டில் இருக்கிற டாட்டூதான் பிரச்னை. படப்பிடிப்பில், அதை மறைக்க அதிக மேக்கப் போட வேண்டியிருக்கிறது’ என்கிறார் சிரித்துக்கொண்டே. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com