செல்ஃபி தொல்லை: விமானத்தை தவற விட்டார் டாப்ஸி

செல்ஃபி தொல்லை: விமானத்தை தவற விட்டார் டாப்ஸி

செல்ஃபி தொல்லை: விமானத்தை தவற விட்டார் டாப்ஸி
Published on

ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று தொல்லைக் கொடுத்ததால் நடிகை டாப்ஸி விமானத்தை தவறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கில் பரபரப்பாக நடித்து வந்த டாப்ஸி, இப்போது இந்திப் படங்களில் நடித்துவருகிறார். இதற்காக மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். சொந்த ஊரான டெல்லிக்கு தோழிகள் மற்றும் உறவினரைப் பார்க்க அவ்வப்போது சென்று வருவார். சமீபத்தில் மும்பையில் இருந்து டெல்லி சென்ற அவர், தோழிகளைப் பார்த்துவிட்டு மும்பை திரும்ப, டெல்லி விமான நிலையில் வந்தார். 
அங்கு டாப்ஸியை கண்டதும் திடீரென்று ரசிகர்கள் கூடிவிட்டனர். சில ரசிகர்ள் அவருடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூறினர். பொறுமையாக போஸ் கொடுத்தார் டாப்ஸி. பிறகுதான் வாட்சை பார்த்தார். செக் இன் டைம் முடிந்துவிட்டது தெரிந்தது. பிறகு டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு வேறு விமானத்தில் மும்பை சென்றார்.

இதுபற்றி டாப்ஸி கூறும்போது, ‘நான் வெளியிடங்களுக்கு சென்றால் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில்லை. ஏனென்றால் நான் பாதுகாப்பில்லாமல் செல்கிறேன். அது பிரச்னையை கொண்டு வந்துவிடும் என்பதால் அப்படிச் செய்வதில்லை. ஆனால் அன்று வந்தவர்களில் அதிகமானோர் குழந்தைகள். அனைவரும் என் நடிப்பையும் படத்தின் கேரக்டரையும் பற்றி டீட்டெய்லாக பேசியதால், அவர்கள் அன்புக்கு மதிப்பு கொடுக்க நினைத்து செல்ஃபி எடுக்க சம்மதித்தேன். உண்மையிலேயே நேரம் போனது தெரியவில்லை’ என்றார் டாப்ஸி. 
பாசக்காரத் தாயி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com