தொப்புள் விவகாரம் : மன்னிப்புக் கேட்டார் டாப்ஸி!
தெலுங்கு இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்கிய 'ஜும்மாண்டி நாதம்' என்ற படம் மூலம் ஹீரோயின் ஆனார் டாப்ஸி. தெலுங்கை அடுத்து தமிழ், இந்தி படங்களில் நடிக்கத் துவங்கினார். இப்போது இவர் இந்தியில் நடித்த ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் ஹிட்டாகின. இந்நிலையில் டாப்ஸி தென்னிந்திய சினிமா பற்றி சொன்ன கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் கூறும்போது, ’கிளாமர் கேரக்டர்களில் மட்டுமே என்னால் நடிக்க முடியும் என்று தென்னிந்திய சினிமாவில் நினைக்கிறார்கள். பிங்க் மற்றும் நாம் ஷபானா படங்களை பார்த்த பிறகே, ’ஓ. இந்த பொண்ணுக்கு நடிக்கத் தெரியும்’ என்று புரிந்து கொண்டனர். அங்கு தொப்புள் மீது அதிக ஆர்வம் காட்டுவது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் அதை அழகாக்கிவிட்டு சென்றிருப்பேன். என் அறிமுகப் படத்தில், பாடல் காட்சியைதான் முதலில் படமாக்கினார்கள். என்னை அறிமுகப்படுத்தி வைத்த இயக்குனர், ஹீரோயின் இடுப்பில் பழம், பூக்களை வீசுவதற்கு பெயர் பெற்றவர். என் இடுப்பில் தேங்காயை வீசினார்கள். தேங்காயை இடுப்பில் போடுவது எப்படி கவர்ச்சியாகும்? என்று கூறியிருந்தார். இது
சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் டாப்ஸி. ‘சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து எப்படி சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்துக்கு வந்தேன் என்பதைதான் நான் சொன்னேன். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. யாரையும் புண்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் எனக்கு இல்லை’ என்று கூறியுள்ள டாப்ஸி, இயக்குனர் ராகவேந்திர ராவ் பற்றி கூறியதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.