தாண்டவ் வெப் சீரிஸ் சர்ச்சை - வருத்தம் தெரிவித்தது அமேசான் நிறுவனம்

தாண்டவ் வெப் சீரிஸ் சர்ச்சை - வருத்தம் தெரிவித்தது அமேசான் நிறுவனம்
தாண்டவ் வெப் சீரிஸ் சர்ச்சை - வருத்தம் தெரிவித்தது அமேசான் நிறுவனம்

தாண்டவ் வெப் சீரிஸ் சர்ச்சை தொடர்பாக அமேசான் பிரைம் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.

அமேசான் ப்ரைமில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெளியான வெப் சீரிஸ் ‘தாண்டவ்’. சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த வெப் சீரிஸில், ஹிந்து மதத்தை தவறாக சித்தரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து பாஜக எம்.எல்.ஏ வான மனோஜ் கோடக் ‘தாண்டவ்’ வெப் சீரிஸை தடைசெய்ய வேண்டும் என மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார். மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகமும் அமேசான் தளத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டது.

இதனைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் , கதாசிரியர் கௌரவ் சொலாங்கி, தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  பின்னர், படக்குழு வெளியிட்ட விளக்கத்தில், “தாண்டவ் வெப் சீரிஸ் ஒரு புனைவு. அதில் இடம்பெற்ற காட்சிகள், நபர்கள் என அனைத்தும் தற்செயலாக அமைந்தவை.

படக்குழுவிற்கு எந்த ஒரு தனிநபரையோ, ஜாதியையோ, மதத்தையோ, இனத்தையோ, சமூகத்தையோ, மத நம்பிக்கைகளையோ , அரசியல் தலைவர்களையோ இழிவுப்படுத்தும் எண்ணம் இல்லை. இருப்பினும், படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் யாருடையாவது மனதை புண்படுத்தியிருந்தால் படக்குழு சார்பாக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.” என்று கூறியிருந்தது. 

இந்நிலையில்தான், தொடரில் சில காட்சிகள் பார்வையாளர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தங்கள் என்று அமேசான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாண்டவ் தொடரில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் உடனே நீக்கப்பட்டது எனவும் அந்த அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com