\
‘தளபதி 62’ல் எழுத்தாளர் ஜெயமோகன்

‘தளபதி 62’ல் எழுத்தாளர் ஜெயமோகன்

‘தளபதி 62’ல் எழுத்தாளர் ஜெயமோகன்
Published on

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 62’படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத உள்ளார்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘தளபதி 62’.இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் மெகா ஹிட் ஆகின. இந்நிலையில் பனையூரில், கடந்த 19ஆம் தேதி ‘தளபதி 62’ பூஜையுடன் படம் தொடங்கியது. விஜய் தனது கையால் கிளாப் அடித்து  படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.இந்தப் படத்துக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளார். இவர் ஏற்கெனவே மணிரத்னம் இயக்கிய கடல் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘2.0’ படத்துக்கும் இவர்தான் வசனம் எழுதியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com