புஷ்கர் காயத்ரி கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்! `சுழல்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

புஷ்கர் காயத்ரி கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்! `சுழல்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
புஷ்கர் காயத்ரி கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்! `சுழல்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வெப் தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வெப் தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் 'ஓரம் போ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கியுள்ளனர். விக்ரம் வேதா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இவர்கள் திரைக்கதை எழுதியுள்ள வெப் தொடர் 'சூழல்’.

இந்த வெப் தொடரில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் ஜூன் 17ஆம் தேதி முதல் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com