சென்னையில் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை
Published on

சென்னை வளசரவாக்கத்த்தில் தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை தனது வீட்டிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வளசரவாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றினர். பின்னர், நடிகை பிரியங்காவின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 32 வயதான பிரியங்காவுக்கு குழுந்தை இல்லாததால் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்கொலை சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடக்கத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா பின்னர் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com