’தமிழ்ப்படம் 2.0’ பெயர் திடீர் மாற்றம்!

’தமிழ்ப்படம் 2.0’ பெயர் திடீர் மாற்றம்!

’தமிழ்ப்படம் 2.0’ பெயர் திடீர் மாற்றம்!
Published on

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே, மனோபாலா உட்பட பலர் நடித்திருந்த ’தமிழ்ப்படம்’ 2010-ம் ஆண்டு வெளியானது. தமிழ்த் திரைப்படங்களில் சம்பிரதாயங்களை கிண்டல் செய்து, வெளியான இந்தப் படம் ஹிட்டானது. ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்திருந்தார். கண்ணன் இசை அமைத்திருந்தார். இதையடுத்து அமுதன் ’இரண்டாவது படம்’ என்ற படத்தை உருவாக்கி இருந்தார். பல் வேறு காரணங்களால் இந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை. 

இதையடுத்து அவர் ’தமிழ்ப் படத்தி’ன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான டாப் ஹீரோ படங்களோடு அரசியலை யும் கிண்டல் செய்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் பாகத்தில் நடித்த சிவாவும் திஷா பாண்டேவும் இதிலும் ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் ஐஸ்வர்யா மேனன், கஸ்தூரி, சதீஷ், சந்தானப்பாரதி உட்பட பலர் நடிக்கின்றனர். 

இந்தப் படத்துக்கு ’தமிழ்ப் படம் 2.0’ என்று டைட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று டைட்டிலை ’தமிழ்ப்படம் 2’   என்று டைட்டிலை மாற்றியுள்ளது படக்குழு. இதைத்தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com