\
தியேட்டர்களுக்கு அனுமதி: முதல்வரிடம் நேரில் வலியுறுத்த திரையரங்கு உரிமையாளர்கள் திட்டம்

தியேட்டர்களுக்கு அனுமதி: முதல்வரிடம் நேரில் வலியுறுத்த திரையரங்கு உரிமையாளர்கள் திட்டம்

தியேட்டர்களுக்கு அனுமதி: முதல்வரிடம் நேரில் வலியுறுத்த திரையரங்கு உரிமையாளர்கள் திட்டம்
Published on

திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும், உள்ளூர் வரி, சொத்து வரி உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் முதலான கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் முன்வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கிற்கு முன்பே தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. ஆனால், தளர்வுகள் வழங்கப்பட்டபோது தொழில் நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கிய மாநில அரசு, திரையரங்குகளுக்கு தடையை நீட்டித்தது. இதனால் திரைத்துறையினரும், திரையரங்கு உரிமையாளர்களும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நாளை முதல்வரிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைக்க உள்ளனர். அதேபோல் கேளிக்கை வரி, உள்ளூர் வரி, சொத்து வரி ரத்து உள்ளிட்ட வேண்டுகோள்களையும் முன்வைக்க திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதி வழங்கவுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com