\
தமிழக தேர்தலுக்கும் ரஜினி விருதுக்கும் சம்பந்தமில்லை: பிரகாஷ் ஜவடேகர்

தமிழக தேர்தலுக்கும் ரஜினி விருதுக்கும் சம்பந்தமில்லை: பிரகாஷ் ஜவடேகர்

தமிழக தேர்தலுக்கும் ரஜினி விருதுக்கும் சம்பந்தமில்லை: பிரகாஷ் ஜவடேகர்
Published on

தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இதற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் தமிழக தேர்தலையொட்டி ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com