\
ஜுலை 14ல் இயக்குநர்கள் சங்கத் தேர்தல்

ஜுலை 14ல் இயக்குநர்கள் சங்கத் தேர்தல்

ஜுலை 14ல் இயக்குநர்கள் சங்கத் தேர்தல்
Published on: 

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வரும் ஜுலை ‌14ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் சங்க பொதுக்குழுவில் அச்சங்கத்தின் தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து தலைவர் பதவி நீங்கலாக துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டும் தேர்தல் ‌நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் 27ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், ஜுலை 3ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தேர்தல் நடத்தும் அதிகாரியான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்நாதன் அறிவித்துள்ளார். 

மேலும், ஜுலை 14ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் வாக்குப்பதிவு நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com