சினிமா
தமிழ் திரைப்படங்களை கண்டுகளிக்க புதிய ஆப்: தயாரிப்பாளர் சங்கம் திட்டம்
தமிழ் திரைப்படங்களை கண்டுகளிக்க புதிய ஆப்: தயாரிப்பாளர் சங்கம் திட்டம்
தமிழ் திரைப்படங்களை நேரடியாக டிஜிட்டல் மற்றும் டிடிஹெச் முறையில் வெளியிட தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக, இயக்குநர்கள் மற்றும் நடிகர் சங்கங்களுடன் ஆலோசித்து புதிய ஆப் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர்களுக்கு எதிராக விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் தொடர்ந்து செயல்பட்டதால் இந்த முறையை விரைவில் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை வெளியிடும் போது, விளம்பர செலவு, திருட்டு வி.சி.டி போன்றவை குறையும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.