காலத்தால் அழிக்க முடியாத கலைஞன் சந்திரபாபுவின் பிறந்தநாள் இன்று !

காலத்தால் அழிக்க முடியாத கலைஞன் சந்திரபாபுவின் பிறந்தநாள் இன்று !
காலத்தால் அழிக்க முடியாத கலைஞன் சந்திரபாபுவின் பிறந்தநாள் இன்று !

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம்பிடித்தவர் சந்திரபாபு. தமிழ் திரைப்பட துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடு கொண்ட அற்புதமான கலைஞனாகவும் விளங்கியவர். ஜோசப் பிச்சை என்னும் இயற்பெயர் கொண்ட சந்திரபாபு, 1927 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். பெற்றோர் ஜே.பி.ரோட்டரிக்ஸ் - ரோசரின். இவருடைய குடும்பம் சுதந்திரப் போராட்டக் காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்டு, ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் சந்திரபாபுவின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது.

சிறிது காலத்துக்கு பிறகு அவருடைய குடும்பம் மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு, சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டார். பல இன்னல்களுக்குப் பிறகு, 1947- ஆம் ஆண்டு ‘தன அமாராவதி’ என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாத்துறையில் முதன் முதலாக கால்பதித்தார். தமிழில் புதையல், சகோதரி, நாடோடி மன்னன், குலேபகாவலி, நீதி, ராஜா, பாதகாணிக்கை, நாடோடி மன்னன், கவலை இல்லாத மனிதன், அடிமைப்பெண் போன்றவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

குறுகிய காலத்திற்குள் பல திரைப்படங்களில் நடித்து, நகைச்சுவை நடிப்பில் மன்னனாக திகழ்ந்தார். குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே(மரகதம்), உனக்காக எல்லாம் உனக்காக(புதையல்), பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே(மணமகள் தேவை), நானொரு முட்டாளுங்க(சகோதரி), சிரிப்பு வருது சிரிப்பு வருது(ஆண்டவன் கட்டளை), தடுக்காதே என்னை தடுக்காதே(நாடோடி மன்னன்), பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது(போலீஸ்காரன் மகள்), புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை(அன்னை) போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளையும் கடந்து இன்னும் இசை நெஞ்சங்களின் மனதில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

எம்.எஸ்.வி., கண்ணதாசன், சிவாஜி, எம்ஜிஆர் இவர்களை அவருக்கு ரொம்ப பிடிக்கும். 1975-ம் ஆண்டு வெளிவந்த ‘பிள்ளைச் செல்வம்’ (1974) என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47-வது வயதில் இறந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சோகம் இருந்தாலும் தன்னுடைய இறுதிக் காலம் வரை மக்களை மகிழ்வவிக்கும் கலைஞனாகவே வாழ்ந்து மறைந்தார் சந்திரபாபு.

நடிப்பில் தனியொரு பாணியை கடைப்பிடித்த கலைஞனான சந்திரபாபுவின் கல்லறைக்கு சென்ற இயக்குநர் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com