\
துருக்கியில் தவிக்கும் ’துருவ நட்சத்திரம்’ டீம்!

துருக்கியில் தவிக்கும் ’துருவ நட்சத்திரம்’ டீம்!

துருக்கியில் தவிக்கும் ’துருவ நட்சத்திரம்’ டீம்!
Published on

விக்ரம் நடிக்கும் ’துருவ நட்சத்திரம்’ படக்குழு துருக்கி நாட்டில் தவித்து வருவதாக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.

விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடிக்கும் படம், ’துருவ நட்சத்திரம்’. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. பாடல் மற்றும் சில வசன காட்சிகளுக்காக படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன் துருக்கி சென்றது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்ப, துருக்கி சர்வதேச விமான நிலையத்துக்கு படக்குழு திரும்பியது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லை என கூறி, அங்குள்ள அதிகாரிகள் அவர்களை தடுத்து வைத்துள்ளனர்.

ஜார்ஜியாவில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு கேமரா மற்றும் காஸ்ட்யூமுடன் சாலை வழியாக சென்றுகொண்டிருந்ததாகவும் கடந்த 24 மணி நேரமாக துருக்கி எல்லையில் தவித்து வருவதாகவும் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

உரிய அனுமதி கடிதம் அளிக்கப்பட்டும் துருக்கி பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com