இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு

இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு

இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு
Published on

’ஆண் தேவதை’, ‘ரெட்டச் சுழி’ படங்களின் இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த கொரோனா இரண்டாம் அலையால் தினந்தோறும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுமக்களுடன் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 53 வயதான இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். தமிழில் ’ரெட்டச் சுழி’, ’ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இவருக்கு திரைத்துரையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com