நகைச்சுவை நடிகர் நீலு மறைவு

நகைச்சுவை நடிகர் நீலு மறைவு

நகைச்சுவை நடிகர் நீலு மறைவு
Published on

பிரபல நகைச்சுவை நடிகர் நீலு இன்று உடல்நலம் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

நீலு என்று அழைக்கப்படும் இவரது இயற்பெயர் நீலகண்டன். ஜூலை 26, 1936ஆம் ஆண்டு பிறந்த நீலு, கேரள மாநிலத்தில் உள்ள மஞ்சேரி என்ற ஊரை சேர்ந்தவர். இவர் படித்தது எல்லாம் சென்னையில்தான். தனியார் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருப்பினும் சிறுவயது முதலே நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர். தனது 7 வயதிலிருந்தே நாடகங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறையில் 1966ஆம் கால் பதித்த இவர், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவாஜி கணேசன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அர்ஜூன், அஜீத், சரத்குமார், பிரபு, கார்த்திக், விக்ரம், மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இவருக்கு“வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக உடல்நலம் சரியின்றி காணப்பட்ட இவர், இன்று காலமாகியுள்ளார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com