\
''எனக்கு நெஞ்சுவலி; மருத்துவ உதவி செய்யுங்கள்'' - நடிகர் பெஞ்சமின் உருக்கமான வேண்டுகோள்!

''எனக்கு நெஞ்சுவலி; மருத்துவ உதவி செய்யுங்கள்'' - நடிகர் பெஞ்சமின் உருக்கமான வேண்டுகோள்!

''எனக்கு நெஞ்சுவலி; மருத்துவ உதவி செய்யுங்கள்'' - நடிகர் பெஞ்சமின் உருக்கமான வேண்டுகோள்!
Published on

''எனக்கு நெஞ்சுவலி...மருத்துவ உதவி செய்யுங்கள் நண்பர்களே'' என்று திருப்பாச்சி நடிகர் பெஞ்சமின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் பெஞ்சமின் ’திருப்பாச்சி’ படத்தில் கண்ணப்பன் என்ற ரோலில் நடிகர் விஜய்க்கு நண்பராக நடித்து பிரபலமானவர். ‘ஆட்டோகிராப்’ படத்தில் அறிமுகமான இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அருள், வேங்கை, ஐயா, திருப்பதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

54 வயதாகும் அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு போதிய வசதி இல்லையென்றும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், ‘’எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து சேலத்தில் மூன்று நாட்கள் சிகிச்சை எடுத்தேன். இங்கு அறுவைசிகிச்சை செய்யும் அளவிற்கு எனக்கு வசதியில்லை. பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லை. நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் கூறி, மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று உதவி கேட்டிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com