டிக்கெட் விலை உயர்வால் தமிழ்சினிமா அழிய நேரும்: சீனு ராமசாமி எச்சரிக்கை

டிக்கெட் விலை உயர்வால் தமிழ்சினிமா அழிய நேரும்: சீனு ராமசாமி எச்சரிக்கை
டிக்கெட் விலை உயர்வால் தமிழ்சினிமா அழிய நேரும்: சீனு ராமசாமி எச்சரிக்கை

டிக்கெட் விலை உயர்வால் தமிழ் சினிமா அழிய நேரும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சீனு ராமசாமி எச்சரித்துள்ளார்.

தமிழக அரசு டிக்கெட் விலையை 25 சதவீதம் உயர்த்தி கொள்ள அனுமதி அளத்திருந்தது. அதன்படி இன்று முதல் அந்த விலை ஏற்றம் அமலுக்கு வந்தது. சிலர் இந்தக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சீனு ராமசாமி இந்தக் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக் கனியாகிவிட்டது. இதனால் பொது மக்களால் நியாயமாக பணம் கொடுத்து தியேட்டருக்குப் போய் படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சினிமா தொழில் அழிய நேரும். அதிகக் கட்டணம் வெகுஜன மக்களுக்கு தியேட்டர் என்று சொன்னாலே அலர்ஜீ ஆக்கிவிடும். உற்பத்தி, வினியோகம், தொழிலாளர்கள், ஏன் தமிழ் ராக்கர்ஸுக்கும் இது பாதிப்புதான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நகரத்திலுள்ள மால்களில் சினிமா பார்ப்போரை ஊக்கப்படுத்த ஜனங்களுக்கு பாதி பார்க்கிங் கட்டணத்தையும் நியாயமான விலையில் பாப்கார்னையும் தர அன்போடு வேண்டுகிறேன் என்றும் சீனு ராமசாமி கோரிகை வைத்துள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com