கோவில் கட்டும் கவிஞர்.. கைகொடுக்கும் கஞ்சா கருப்பு!
தமிழ் சினிமாவில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளவர் கவிஞர் ஜெயங்கொண்டான். தற்போது கவுண்டமணி நடிக்கவிருக்கும் ’சட்டமன்றத்தில் பேய்’ உள்ளிட்ட நான்கு படங்களுக்கும் மேல் பாடல்களை எழுதி வருகிறார்.
சென்னை கே.கே.நகரில் ’கவிஞர் கிச்சன்’உணவகத்தை நடத்தி வரும் இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்போது இவருக்கு ஆதரவாக நடிகர் கஞ்சாகருப்பு நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் வாக்குறுதியாக ஜெயங்கொண்டம் தொகுதியில் உள்ள ஏந்தல் கிராமத்தில் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலை புதுப்பித்துத் தருவதாக கூறியிருக்கின்றனர். அந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற முடியாவிட்டாலும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தற்போது அந்த கோவிலை கட்டிவருகிறார் ஜெயம்கொண்டான். பிரச்சாரத்தில் பங்கேற்று கோவில் கட்ட வாக்குறுதி அளித்ததால் தனது பங்கிற்கு நன்கொடையாக குறிப்பிட்ட பணத்தை வழங்கி இருக்கிறார் கஞ்சாகருப்பு